HomeCinema வீரப் பெண்ணாக நயீரா நிகாரின் அசத்தலான நடிப்பில்,  மாஸ்டர் ராஜநாயகம் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற 'வஞ்சி'...

 வீரப் பெண்ணாக நயீரா நிகாரின் அசத்தலான நடிப்பில்,  மாஸ்டர் ராஜநாயகம் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற ‘வஞ்சி’ திரைப்படம் விரைவில் ரிலீஸ்!

Published on

மாஸ்டர் ராஜநாயகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, விமலா ராஜநாயகம் தயாரிக்கும் 3-வது படம் ‘வஞ்சி.’ இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜேஷ் சி ஆர்.

கதை நாயகனாக ராஜேஷ் நடிக்க, கதைநாயகி வஞ்சியாக நயீரா நிகார் நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த படம் தமிழ்நாடு, கேரளா மலைப் பகுதிகளின் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரியும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் நிலைமை என பலவற்றை மையப்படுத்தி, உண்மை சம்பவப் பின்னணியில் உருவாகிறது.

தினமும் வன விலங்குகளால் ஏற்படுகிற கூலி தொழிலாளர்களின் மோசமான உயிர் பலிகள் சம்பந்தப்பட்ட விசயத்தில் அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதையெல்லாம் விவரிக்கிறது கதைக்களம். அந்த இடத்தில் வாழ்கிற பெண் வஞ்சி. அவள் பெண் என்பவள் கோழையாக இல்லாமல் வீரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவள். அந்த கதாபாத்திரத்தில் மன தைரியத்தோடு, மலைக் காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு மக்களாக நடித்து, வாழ்ந்து மிரட்டிருக்கிறார் கதை நாயகி நயீரா நிகார். எல்லோருக்கும் பாடமாக இருக்கும்படி அமைந்துள்ள இந்த் படத்தின் பாடல்கள் மண் வாசனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவை மக்களின் மனதில் இடம் பிடிக்கும்படி இருக்கும். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – ஃபென்சீர்

இசை: சஜித் சங்கர்

படத்தொகுப்பு: ஜெயகிருஷ்ணன்

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this