HomeMovie Reviewயு ஐ சினிமா விமர்சனம்

யு ஐ சினிமா விமர்சனம்

Published on

உபேந்திராவுக்கு வில்லங்க விவகாரங்களை தான் இயக்கும் படங்களில் புகுத்துவது பிடித்த விஷயம். இந்த முறை கல்கி பகவான் அவதாரமெடுத்து அதே வில்லங்க விவகாரத்தை வீரியமாக செய்திருக்கிறார்.

கதை நாயகர்களாக இருவர்; அதில் ஒருவர் நல்லவராக நடந்துகொள்ள, இன்னொருவர் தன்னை கல்கி பகவான் என சொல்லிக் கொண்டு மக்களை கொடுமைப்படுத்தும் அரக்கனாக வலம் வர, அவர் அப்படி கொடூரனாக மாறியிருப்பதற்கான காரணங்களே திரைக்கதை… அவர் மக்களுக்கு செய்யும் கொடுமைகளும் கொலைகளும் அதிர வைப்பவை.

நல்லவர் கெட்டவர் என கேரக்டர்களின் வித்தியாசத்துக்கேற்ப நடை உடை குரல் என அனைத்திலும் வெரைட்டி காட்டியிருக்கும் உபேந்திரா  படு வித்தியாசமாக உருவாக்கியிருக்கும் கதைக்களம் பிரமாண்டத்தால் மிரட்டுகிறது.

மற்ற கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்கள் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக செய்திருக்க அஜனிஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்துக்கு தனி கம்பீரத்தை கட்டமைத்துள்ளது.

மக்களை அடைத்து வைத்திருக்கும் இடம், கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டது போல் சிதைந்து கிடக்கும் கட்டடங்கள் என பலவற்றை கவனம் ஈர்க்கும் விதமாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநரின் உழைப்பு, அனைத்தையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவு படத்தின் பலம்.

கதையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தாலும், தனித்துவமான திரைப்படங்களின் வரிசையில் இணைவதற்கான தகுதிகளுக்குப் பஞ்சமில்லை.

யு ஐ – வினோதம், வித்தியாசம், விபரீதம்!

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this