HomeCinemaஇயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ் - விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18'படத்தின் டைட்டில் லுக்! 

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18’படத்தின் டைட்டில் லுக்! 

Published on

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இயக்கும் முதல் படம் ‘அண்டர் 18.’  இந்த படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும் இணைத்து எமோஷனல் டிராமாவாக உருவாகிறது.
இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.
மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக இந்த படம் உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this