HomeMovie Reviewஅன்டில் டான் (Until Dawn) ஹாலிவுட் திரைப்படம் ஒரு பார்வை

அன்டில் டான் (Until Dawn) ஹாலிவுட் திரைப்படம் ஒரு பார்வை

Published on

நடக்கும் சம்பவங்கள் பயத்தையும், அடுத்து காட்சியில் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தையும் உருவாக்கும் படம்.

ஒரு இடத்தில் இரண்டு இளைஞர்கள், மூன்று இளம் பெண்கள் அமானுஷ்ய சக்திகளின் பிடியில் சிக்கி, கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைகிறார்கள். அப்படி மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வலம் வருகிறார்கள். மீண்டும் கொல்லப்படுகிறார்கள்; மீண்டும் உயிர் பெறுகிறார்கள். அவர்கள் ‘டைம் லூப்’ என்கிற காலச்சுழற்சிக்குள் தள்ளப்பட்டிருப்பதால், உயிரிழந்தாலும் மீண்டும் உயிர் பிழைக்க முடிகிறது.

கொல்லப்படுவதும், உயிர் பிழைப்பதுமாக மாறி மாறி நடந்துகொண்டிருந்தால் முடிவுதான் என்ன? ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபட்டு இலக்கை அடைந்தால் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமையான சிக்கலில் இருந்து மீள முடியும்.

இப்படி தடதடக்கும் கதையில் அவர்களின் நிலைமை என்னவானது என்பது மிச்சசொச்ச கதை…

‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எப். சாண்ட்பெர்க் இயக்கியுள்ள இந்த படம் 2015 -ல் வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான படைப்பாக உருவாகியுள்ளது.

அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக உயிரை விடுகிற அந்த ஐந்து பேரின் நடிப்புப் பங்களிப்பு கதைக்கேற்றபடி கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. அவர்கள் கொல்லப்படும் விதம் கொடூரமாக இருக்க, ஒரு கட்டத்தில் அவர்கள் வெடித்துச் சிதறும்போது படம் பார்க்கும் நமக்கு பயத்தின் சதவிகிதம் தாறுமாறாய் எகிறுகிறது.

கதையின் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கிற ஐந்துபேரும் சிக்கித் தவிக்கிற இடம்கூட பயமூட்டுகிறது. அந்தளவுக்கு உழைத்திருக்கிறார் கலை இயக்குநர். பின்னணி இசையில் அதிரடி அட்டகாசம் செய்திருக்கிறார் பெஞ்சமின் வால்பிஸ். ஒளிப்பதிவை படத்தை தாங்கிப் பிடித்திருக்கும் தூண்களில் ஒன்று என்று சொல்லலாம்.

திகில் அனுபவம், திரில்லர் அனுபவம் இரண்டையும் சேர்த்து அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த படம் நல்ல சாய்ஸ்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this