HomeCinemaநாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் நடிக்கும் 'உருட்டு உருட்டு' கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக காரணம் என்ன...

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் நடிக்கும் ‘உருட்டு உருட்டு’ கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக காரணம் என்ன என்பதை காமெடியாக சொல்லும் விதத்தில் உருவாகிறது! 

Published on

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ள படம் ‘உருட்டு உருட்டு.’

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ள பாஸ்கர் சதாசிவத்திடம் படம் பற்றி கேட்டபோது, ”அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது, அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது, ஆனால் தற்போது அந்த விளம்பரங்கள் எங்கேயும் பார்க்க முடிவதில்லை பதிலாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா எங்கள் மருத்துவமனைக்கு வாங்க என்று அனைத்து மாவட்டத்திலும் உள்ள நகராட்சி, ஊராட்சி என எல்லா இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் சொல்கிறோம்.

பிரபல நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

‘மூணு பொண்டாட்டி முனுசாமி’ கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய் சங்கர் ‘டபுள் டாக்மெண்ட்’ தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடன இயக்குனர் தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை கொடுத்துள்ளார்.

விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தொடர்ந்து படம் திரையரங்களில் வெளியிட இருக்கிறோம்”என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – யுவராஜ் பால்ராஜ்
பாடல் இசை – அருணகிரி
பின்னணி இசை – கார்த்திக் கிருஷ்ணன்
பாடல்கள் – பெப்சி தாஸ், பாஸ்கர்
எடிட்டிங் – திருச்செல்வம்.
நடனம் – தினா
விளம்பர வடிவமைப்பு – விஜய் கா. ஈஸ்வரன்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Latest articles

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்'...

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் ‘யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=OrIqzmpg04k AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில்,...

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ம் தேதி வெளியாகிறது!

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது. அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்...

முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமியின் கோரிக்கை!

எழுத்தாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வருபவர்  சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் எழுதிய 'சினிமாவின் ஆன்மா'...

More like this