HomeMovie Reviewதக் லைஃப் சினிமா விமர்சனம்

தக் லைஃப் சினிமா விமர்சனம்

Published on

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை பிரமாண்டமான கேங்ஸ்டர் கதையை பார்க்கிற வாய்ப்பு…

சக்திவேல் (கமல்ஹாசன்) டெல்லியில் பெரிய கேங்ஸ்டர். அவர், சிறுவயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த அமரனை (சிம்பு) வளர்த்து, தன்னைப் போலவே கேங்ஸ்டராக்குகிறார். ஒரு கட்டத்தில் அமரன், சக்திவேலை தீர்த்துக்கட்டி அவரது இடத்தைப் பிடிக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தால் இரு தரப்பும் சந்திக்கிற பிரச்சனைகளே மீதிக்கதை.

கேங்ஸ்டராக நடிப்பது கமலுக்கும் சரி, சிம்புவுக்கும் சரி புதிய விஷயமில்லை. அடிதடி, வெட்டுக்குத்து, துப்பாக்கிச் சூடு, பகையுணர்ச்சி, பழிவாங்கல், காதல், பாசப்பிணைப்பு என எல்லாவற்றையும் கலந்துகட்டிய காம்போ பேக்காக களமாடி கலக்கியிருக்கிறார்கள். ஆக்சன் கோரியோகிராபர்(கள்) அன்பறிவு தந்த பயிற்சியோடு இருவரும் மோதுகிற சண்டைக் காட்சிகள் வெறித்தனம்.

சொந்த தம்பியை கொன்று தீர்க்க துடிக்கும் அண்ணனாக நாசரின் நடிப்பு வழக்கம்போல் கம்பீரம்.

சக்திவேல் மிகப்பெரிய சக்தி என்றால் அவரை எதிர்க்கும் சக்தியாக மகேஷ் மஞ்ரேக்கரின் பங்களிப்பில் அதட்டல் உண்டு, அலட்டல் இல்லை.

த்ரிஷாவுக்கு கமலுடன் ‘அந்த’ மாதிரி தொடர்பிலிருக்கிற பெண், சிம்பு அடைய விரும்பும் பெண் என கொஞ்சம் அப்படியும் இப்படியுமான கதாபாத்திரம். மெல்லிய புன்னகையுடன் தன் கடமையை செய்திருக்கிறார்.

கமலின் மனைவியாக அபிராமி. கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிந்தும், பெரிதாய் எந்த பிரச்சனையும் செய்யாத மனுஷியாய் நடமாடுகிறார்.

அசோக் செல்வன் காவல்துறை உயரதிகாரியாக, ஸ்மார்ட் லுக்கில் சில காட்சிகளில் எட்டிப் பார்க்கிறார்.

ஜோஜு ஜார்ஜ், பக்ஸ் என சிலர் கேங்ஸ்டர் கூட்டத்தில் ஒருவராக வந்து போகிறார்கள். ஐஸ்வர்யா லெஷ்மி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வடிவுக்கரசி, சின்னி ஜெயந்த் என நட்சத்திரங்களுக்குப் பஞ்சமில்லை.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘ஜிங்கு ஜிங்குச்சா’ பாடலில் எனர்ஜி எக்கச்சக்கம். ‘அஞ்சு வண்ணப் பூவே’ பாடல் இதமாய் இனிமையாய் அவ்வப்போது செவிகளை உரசுகிறது. முத்தமழை பாடலை படத்தில் காணவில்லை. ‘விண்வெளி நாயகா, விண்வெளி நாயகா’ என ஸ்ருதிஹாசன் குரல் சில நொடிகள் ஒலியாக கேட்பதோடு சரி; பாடலாக இடம்பெறவில்லை. பின்னணி இசையிலும் ரஹ்மானின் ஆளுமை கொஞ்சம் குறைவுதான். காட்சிகளின் போக்கு அப்படி.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாகியிருக்கின்றன.

கேங்ஸ்டர்கள் எல்லாவிதமாக குற்றச்செயல்களையும் செய்வார்கள்; அதில் வரும் பணத்தில் யாருக்காவது நல்லதும் செய்வார்கள்; நல்லது செய்வதற்காகவே கேங்ஸ்டராக தொடர்வார்கள்.

இந்த படத்தில் கமலும் சிம்புவும் கேங்ஸ்டராக என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை; அவர்கள் யாருக்கும் நல்லது செய்வதாகவும் தெரியவில்லை. கொலைவெறியோடு அவர்களுக்குள் அடித்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் படத்துக்கு நேரம் சரியில்லாமல் போயிருக்கிறது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணி சார்.

Rating 2.5 / 5

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this