HomeCinemaகானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் 'தீட்டு' ஆல்பம் பாடல் விரைவில்...

கானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம் பாடல் விரைவில் ரிலீஸ்!

Published on

‘தீட்டு’ என்ற பெயரில் பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. கானா பாலா பாட, ஆதேஷ் பாலா, ரதி நடித்துள்ளனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளமாய் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்றும் கூறியிருக்கிறார்.

சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா?

இப்படி பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ உருவாகியுள்ளது.

இந்த பாடல் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் பேசியபோது, ”நமது அறிவார்ந்த முன்னோர்கள் இயற்கையான பெண்களின் உடலியல் மாற்றமான மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் சோர்வையும் மன அழுத்தத்தையும் போக்கும் விதத்தில் அவர்களது அவஸ்தையைப் புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தனிமைப் படுத்தினர்.

அதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுமையைப் புகுத்தின இதையே பெண்களுக்குக் காலங்காலமாக இழைத்து வருகின்றனர்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு ஆண்கள் மத்தியில் ஏற்பட வேண்டி உள்ளது. அதற்காகவே இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம். நல்லதொரு துள்ளல் இசையில் பெண்மையைப் போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம். பாடல் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.

ப்டைப்பில் பங்களிப்பு:
தயாரிப்பு: அருண்குமார், மோனிஷா நவீன்
ஒளிப்பதிவு: பாலாஜி பாஸ்கரன்
இசை: ரஷாந்த் அர்வின்
பாடலாசிரியர்: வி.ஜே.பி ரகுபதி

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this