HomeGeneralதியாகராஜா டாக்கீஸின் முதல் தயாரிப்பு... ஜெய் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தியாகராஜா டாக்கீஸின் முதல் தயாரிப்பு… ஜெய் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

Published on

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராஜா டாக்கீஸ் – இயக்குநர் சிவ பிரசன்னா – ஜெய் ஆகியோர் கூட்டணியில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Latest articles

‘டோரதி’யில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது! -நடிகர் முத்துக்குமார்!

ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என...

அதிநவீன ‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அறிமுகம்!

செயற்கை இதயம் மற்றும் நுரையீரலாக பயன்படும் பல்வேறு நவீன எக்மோ கருவிகளை கொண்ட இந்த அவசர சிகிச்சைப் பிரிவு...

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

கூத்துக் கலைஞர்களின் துயரத்தைப் பேசாமல் கொண்டாட்டத்தைப் பேசுகிற ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படம்!

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும் பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார். மக்களிடையே  பின்பற்றப்படும்...

More like this