HomeGeneralகோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'துரோகம் பழகு' திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர்...

கோவை ரத்தினம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3rd Look மற்றும் டீசர் வெளியீட்டு விழா! 4000 மாணவ-மாணவிகள் உற்சாக வரவேற்பு!

Published on

மகிழ் புரொடக்சன்ஸ் பியூலா மகிழ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு.’ தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
​முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
​இதன் தொடர்ச்சியாக, கோவையில் உள்ள பிரபல ரத்தினம் கல்லூரியில் இப்படத்தின் பிரம்மாண்ட ப்ரொமோஷன் விழா நடைபெற்றது. சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதன் மத்தியில் 3rd look போஸ்டரை வெளியிட்டனர்.
​இந்நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த நடிகர் தக்க்ஷன் விஜய் மற்றும் வாழை ஜானகி அம்மா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர். படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், தங்களது திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
​விழாவின் மிக முக்கிய சிறப்பம்சமாக திரையிடப்பட்ட இப்படத்தின் டீசர், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசர் மீது கொண்ட அதீத ஈர்ப்பால், அதனை Repeat Mode யில் மீண்டும் ஒளிபரப்பச் சொல்லி  மாணவ மாணவியர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்
மாணவிகளின் உற்சாகத்திற்கு மதிப்பளித்து, டீசர் மீண்டும் திரையிடப்பட்டு கொண்டாடபட்டது.
​மாணவர்களின் இந்த பேராதரவும், கல்லூரியின் எழுச்சியான வரவேற்பும் ‘துரோகம் பழகு’ படத்தின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இப்படம் மிக விரைவில் திரைக்கு வரவிருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Latest articles

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

https://www.youtube.com/watch?v=FCjzSM0t11s நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ராமராக ரன்பீரின் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்திய...

இது பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்; எல்லா வகையான எமோஷன்களும் இருக்கிறது! – ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ பட விழாவில் நடிகர் சூர்யா

பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் அக்டோபர்...

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது

ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி,...

நயன்தாரா – கவின் நடித்துள்ள ‘Hi’ செப்டம்பர் 25 முதல் ZEE5 தமிழ் ஓடிடி’யில் பார்த்து ரசிக்கலாம்!

https://www.youtube.com/watch?v=LVmH0rgWZb8 நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன்...

More like this