HomeCinemaமக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த 'தென்றலில்' ...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

Published on

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி டாக்ட சாருலதா மணி தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார்.

திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக “தென்றலில்” உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மெல்லிசை அனுபவமாக அமைந்துள்ளது.

சாருலதாவின் குரலில் பல ஹிட் பாடல்கள் மக்கள் மனதில் முதல் இடம் பெற்றவை. என் உச்சி மண்டைல (வேட்டைக்காரன் ), Chillax (வேலாயுதம் ), தீயே தீயே (மாற்றான் ), கண்ணுக்குள் பொத்திவெப்பேன் (திருமணம் இன்னும் நிக்காஹ் ), sada nannu (keerthy suresh Mahanati), அஞ்சு வண்ண பூவே (AR Rahman, Thug Life) போன்ற superhit film songs பாடியவர் சாருலதா. இவர் ஆஸ்திரேலியா Griffith University-யில் இசையில் PhD & Postdoctoral Fellowship முடித்துள்ளார். இசை அமைப்பாளராக இவரின் புதிய அவதாரம் வரவேற்கத்தக்கது.

புது முகங்கள் மாளவிகா & தவன் நடித்து தரேன் கார்த்திக் இயக்கி உள்ளார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this