HomeCinemaஉற்சாகமாக நடந்த தடயம் வெப் சீரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

உற்சாகமாக நடந்த தடயம் வெப் சீரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

Published on

தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது ‘தடயம்’ வெப் சீரிஸ்.
இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.
இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், ”இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் இரவு நேரங்களிலும் கூட எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது ”ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், கே கே சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி” என்றார்.
ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன், Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா, இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் கே கே, எடிட்டர் தினேஷ் குமார், நடிகர் ராஜ்கிரண் தாஸ், எழுத்தாளர், நடிகை கொற்றவை, திரு அழகன் தமிழ்மணி, நடிகர் பிரேம் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...