HomeCinemaஇயக்குநர் மணிரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

இயக்குநர் மணிரத்னம் பாராட்டிய பிஜாய் நம்பியாரின் ‘து யா மெயின்’ திரைப்படம்!

Published on

ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான ‘து யா மெயின்’ சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.  பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணி ரத்னம் படத்தை பாராட்டினார்.
https://www.youtube.com/watch?v=Js8oSyfvtug
படத்தின் சிறப்பு திரையிடலுக்கு பின்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் படத்தைப் பாராட்டிய காணொளிகளை பார்க்க முடிகிறது. சிலர் இதை அற்புதமான படம் எனவும், இன்னும் சிலர் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் புகழ்ந்தனர். குறிப்பாக, படத்தின் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றன. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணி ரத்னம் பகிர்ந்து கொண்டதாவது, “பிஜாய் நம்பியாரின் எனர்ஜி இந்தப் படத்திற்கு பெரும் பலம். பெரிய திரையில் ரசிகர்களுடன் படம் பார்க்கும்போது அதை முழுமையாக அனுபவிக்க முடியும்” என்றார்.
விறுவிறுப்பான மற்றும் அதிரடி தருணங்கள் நிரம்பியுள்ள ‘து யா மெயின்’ சிறந்த திரையரங்க அனுபவம் தரும் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு சர்மா தலைமையிலான கலர் யெல்லோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன், வினோத் பானுஷாலி மற்றும்
கமலேஷ் பானுஷாலி ஆகியோரின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் நேரடியாக பொருந்திப் பார்த்துக் கொள்ளும்படியான உணர்வுகளையும், சீட்டின் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டுள்ள இந்த திரைப்படத்தை உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this