HomeCinemaஇளையராஜா இசையமைக்க ஸ்ரீகாந்த், சிந்தியா லெளர் டே நடிக்கும் ‘தினசரி' விரைவில் ரிலீஸ்!

இளையராஜா இசையமைக்க ஸ்ரீகாந்த், சிந்தியா லெளர் டே நடிக்கும் ‘தினசரி’ விரைவில் ரிலீஸ்!

Published on

ஸ்ரீகாந்த், சிந்தியா லெளர் டே இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘தினசரி’ என பெயரிடப்பட்டுள்ளது. எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

500 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவரும், ஆறு நேரடி தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவருமான என்.விஜயமுரளி தமது மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சங்கர் பாரதி. அவர் இயக்கும் முதல் படம் இது. அவரிடம் படம் பற்றி கேட்டோம்.

மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறுவிறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். ஹீரோவுக்கு ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன்..

இளையராஜா இசையில் முதல் பட இயக்குநர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெணன்டில் இப்போது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம். இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என்படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்” என்றார்.

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ள இந்த படத்தில், இரண்டு பாடல்களுக்கு மாபெரும் அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படக்குழு:-
தயாரிப்பு மேற்பார்வை: பாலமுருகன், சண்முகம்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
கலை: ஜான் பிரிட்டோ
சண்டை பயிற்சி: சாம்
நடனப் பயிற்சி: தினேஷ்
மக்கள் தொடர்பு: கிளாமர் சத்யா

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this