HomeCinemaமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியின் படத்தில் இணைந்தார் தேசிய விருது பெற்ற...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியின் படத்தில் இணைந்தார் தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்!

Published on

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கும்  படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்.

தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எமோஷன், ஆக்‌ஷன்  மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த புதுமையான  இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.

நடிகை தபு  மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் வி டி வி கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this