HomeCinemaஎந்த சந்தர்ப்பத்திலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது! -தணல் படம்...

எந்த சந்தர்ப்பத்திலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது! -தணல் படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா 

Published on

ரசிகர்களிடம் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வரவேற்பு பெற்று வருவதை பார்க்கிறோம். அந்த வரிசையில் நடிகர் அதர்வாவின் ‘தணல்’ படமும் இணைய இருக்கிறது. அன்னை ஃபிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் ரவீந்திர மாதவா இயக்கி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான நடிகர் அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்குப் பிறகு அவரது ‘தணல்’ படம் மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியிருப்பதாவது, “நிறைய ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக ‘தணல்’ இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நேர்மையாக தனது கடமையை செய்வது என இவர்களை சுற்றி கதை இருக்கும்.

திரைக்கதையில் கதாநாயகன் அப்பாவித்தனமும் அதேசமயம் கோபம் கொண்ட இளைஞனாகவும், அவனை யாரும் தடுத்து நிறுத்த முடியாத துணிச்சல் மிக்கவனாகவும் எழுதினேன். இந்த குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்திற்கு அதர்வா முரளி சரியான தேர்வாக இருந்தார். முன்னாள் இரணுவ அதிகாரி கதாபாத்திரத்தை பொருத்தவரை இதில் பல லேயர்கள் இருக்கும். நிறைய யோசனைக்குப் பிறகு அஸ்வின் காகமனுவை தேர்வு செய்தேன். அவரது நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.

விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களின் திறமையான நடிப்பு, எமோஷன்ஸ் மற்றும் ஆக்ஷன் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாரா, பாரத், லட்சுமி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this