HomeCinemaரெஜினா கசான்ட்ரா நடிக்கும் 'தி வைவ்ஸ்.' மதுர் பந்தார்க்கர் இயக்கத்தில் உருவாகிறது.

ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் ‘தி வைவ்ஸ்.’ மதுர் பந்தார்க்கர் இயக்கத்தில் உருவாகிறது.

Published on

நடிகை ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். இந்த புதிய திரைப்படம் ‘தி வைவ்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகிறது.

உணர்வுமிக்க, சிக்கலான கதாபாத்திரங்களை நம்பிக்கையுடன் சித்தரித்து வரும் ரெஜினா, இந்த படத்திலும் ஒரு முக்கியமான கதாநாயகி வேடத்தில் நடிக்கவுள்ளார். இது அவருடைய திறமைகளை மேலும் வெளிக்கொண்டு வரும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர், Fashion, Page 3, Heroine போன்ற படங்களில் பெண்களின் உணர்வுகளையும் வாழ்க்கை பாதைகளையும் மையமாகக் கொண்டு கதைகளை இயக்கி உள்ளார். தற்போது, தி வைவ்ஸ் மூலமாக மீண்டும் அதே பாதையைத் தொடர்கிறார். இந்தப் படம், பெண்களின் வலிமை, உணர்வுகளின் அடுக்கு அடுக்கான வெளிப்பாடுகள் மற்றும் தைரியமான பார்வைகளைக் கூறும் திரைப்படமாக இருக்குமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினாவின் சகஜமான திரைநடிப்பு, மதுர் பந்தார்க்கரின் வலுவான கதை சொல்லும் பாணி ஆகியவை இணைந்து, தி வைவ்ஸ் என்ற திரைப்படத்தை எதிர்பார்க்கத்தக்க ஒரு முக்கிய படமாக மாற்றி உள்ளன.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this