HomeCinemaசாவீ சினிமா விமர்சனம்

சாவீ சினிமா விமர்சனம்

Published on

சாவு வீட்டில் சுவாரஸ்யமான, மர்மமான, அமானுஷ்யமான, கலகலப்பான சம்பவங்கள் நடப்பது போன்ற திரைப்படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. தண்டட்டி, எமகாதகி, பெருசு என பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில் எளிமையான கதையில், எளிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘சாவீ.’

அந்த இளைஞன், தன் தந்தையைக் கொன்றதாக நம்பும் நபரின் மகளைக் காதலிக்கிறான். அந்த தந்தை ஒரு நாள் விபத்தில் இறந்துபோக, அவரது உடலை இரவு முழுக்க பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பை அந்த இளைஞனிடம் ஒப்படைத்து விட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தூங்கி விடுகிறார்கள். தூங்கி எழுந்து பார்த்தால் உடலைக் காணவில்லை.

உடலை யாரிடம் ஒப்படைத்தார்களோ அந்த இளைஞன் உட்பட பலர் மீது சந்தேகம் உருவாகிறது. உடல் எப்படி காணாமல் போனது? என்பதை கண்டறிய போலீஸ் வருகிறது. விசாரிக்க வந்த போலீஸ் மீதே சந்தேகப்படுகிறது சம்பந்தப்பட்ட குடும்பம்.

நடந்தது என்ன என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் கலகலப்பும் திருப்பங்களும் நிரம்பியிருக்கிறது…

துறுதுறுவென்றிருக்கிறார் கதைநாயகன் உதயா தீப். காமெடி கலாட்டாக்களுக்கு உடல்மொழி ஒத்துழைக்கிறது. காதல் சார்ந்த நடிப்புக்கு பாஸ்மார்க் கொடுக்கலாம்.

அவருக்கு ஜோடியாக வருகிற கவிதா சுரேஷ் இளமையாலும் இதமான பேச்சுக்களாலும் கேரக்டருக்கு பொருத்தமான பக்குவமான நடிப்பாலும் கவர்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக வருகிற ஆதேஷ்பாலா, சந்தேகப்படுபவர்களை விசாரிக்கும்போது அதற்கேற்ற வீரியத்தைக் காட்டுகிறார்.

மற்றவர்கள் கதையோட்டத்தின் தேவையறிந்து அளவாக நடித்திருக்க, பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் பலமாகியிருக்கின்றன.

கதாநாயகனின் கனவில் வருபவர்கள் அசம்பாவிதத்தை சந்திப்பது, நிஜத்திலும் அப்படியே நடப்பது என ஆரம்பக் காட்சியை அமைத்து அடுத்தடுத்த காட்சிகள் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டும் இயக்குநர் ஆண்டன் அஜித் கிளைமாக்ஸ் வரை சுவாரஸ்யங்களை அடுக்கி, படத்தை திருப்தி தரும் படைப்பாக்கியிருக்கிறார்.

Rating 3 / 5

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this