HomeCinemaமதுவின் தீமைகளை எடுத்துச் சொல்லும் கதையம்சமுள்ள படமாக ‘சாலா.' பிரபு சாலமனின் இணை இயக்குநர் இயக்கத்தில்...

மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்லும் கதையம்சமுள்ள படமாக ‘சாலா.’ பிரபு சாலமனின் இணை இயக்குநர் இயக்கத்தில் உருவாகிறது.

Published on

கதையம்சமுள்ள படங்கள் எப்போதுமே பெரியளவில் வெற்றியை எட்டுகின்றன. அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.டி. மணிபால் ‘சாலா’ என்ற சிறப்பான கதையைக் கொண்ட படத்தை இயக்கிவருகிறார்.

மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் விதத்தில் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல், பகை என கதை பரபரப்புடன் நகர்கிறது.

அறிமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக சாலமன் (எ) சாலாவாக நடித்துள்ளார். கதைப்படி அவர் தனது 30-வது வயதின் முற்பகுதியில், ஆறு பார்களை சொந்தம் கொண்டாடுபவனாக முரட்டுத்தனமானவனாக இருக்கிறார். மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறார்.

அறிமுக நடிகை ரேஷ்மா, கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயதான சமூக ஆர்வலர், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியர் என அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவீந்திரநாத் குரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார், வைர பாலன் கலை இயக்குநராக உள்ளார்.

படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கின்றனர்.

படக்குழு:-
எழுத்து, இயக்கம்: எஸ் டி மணிபால்
ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு
இசை: தீசன்
கலை: வைரபாலன்
எடிட்டிங்: புவன்
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ, ‘ரக்கர்’ ராம்
நடன இயக்குநர்: நோபல் பால்
ஆடை: நாகு
ஒலி வடிவமைப்பு: லட்சுமி நாராயண ஏ.எஸ்.
விஎஃப்எக்ஸ்: டி நோட் மூர்த்தி
கலரிஸ்ட்: ஆர்.நந்தகுமார்
தயாரிப்பு நிர்வாகி: வே.கி.துரைசாமி
இணை இயக்குநர்: எஸ்.ஏ.பொன்மல்லன்
ஒப்பனை: ஹரி பிரசாத்
ஸ்டில்ஸ்: ரஞ்சித்
கண்டெண்ட் ஹெட்: சத்ய பாவனா காதம்பரி
விளம்பர வடிவமைப்பாளர்: ஜோசப் ஜாக்சன்
தயாரிப்பு: டிஜி விஸ்வ பிரசாத்
பேனர்: மக்கள் மீடியா ஃபேக்டரி
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வி ஸ்ரீ நட்ராஜ்
தமிழ்நாடு வெளியீடு: டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

Latest articles

புதுச்சேரி முதலமைச்சரிடம் ‘சினிமாவின் ஆன்மா’ நூலை வழங்கினார் இயக்குநர் சீனு ராமசாமி: பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி!

திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி இன்று மாலை மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தான் எழுதிய...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

More like this