HomeGeneralCelebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த...

Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சமந்தா ரூத் பிரபு.

Published on

சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும்,நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு உணவுதான் அதிரசம்.சோனி விழாவின் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் வரவிருக்கும் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ₹1 அதிரசத்தை வாங்குவதற்காகக் காசு சேமித்த நினைவுகளைச் சமந்தா பகிர்ந்துகொள்கிறார். இன்றைக்கு அந்த அனுபவத்தை மீண்டும் பெற முடியவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
Endemol Shine India தயாரிக்கும் Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் பிரபலங்கள் பல்வேறு சமையல் சவால்களில் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வரவிருக்கும் எபிசோடில், தீபாவளிப் பலகாரங்களை மையமாகக் கொண்ட சிறப்புச் சவால்கள் நடைபெறுகின்றது. இதில் போட்டியாளர்கள் 90 நிமிடங்களுக்குள் நான்கு வகையான இனிப்பு மற்றும் கார உணவுகளைத் தயாரித்து, ஒரு பண்டிகை பரிசுப் பெட்டியை உருவாக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் ஒரு இனிப்பு, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட வேண்டும் என சவால்கள் உள்ளன.
தீபாவளிப் பலகாரங்கள் குறித்த உரையாடலின்போது தனக்குப் பிடித்தமான உணவுகளில் அதிரசமும் ஒன்று என சமந்தா கூறுகிறார். சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ₹1 அதிரசத்தை வாங்குவதற்காகக் காசு சேமித்து, அதை ரசித்து சாப்பிட்ட நினைவுகளையும் அவர் சொல்லியுள்ளார்.
இந்த உரையாடலில் கலந்துகொள்ளும் செஃப் வெங்கடேஷ் பட், தனது சிறுவயது தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறார். தீபாவளி என்றாலே பட்டாசுகளும் உணவுகளும்தான் தனது நினைவுக்கு வருவதாகக் கூறும் அவர், தங்கள் வீட்டில் தீபாவளிப் பலகாரங்கள் கார்த்திகை தீபம் வரை தொடர்ந்து தயாரிக்கப்படும் என்றும் நினைவுகூர்கிறார். அதிரசம் மற்றும் உலர் பழங்கள் கலந்த மிக்ஸர் ஆகியவை தனக்குப் பிடித்தமான பண்டிகை உணவுகள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் மைசூர் பாக், முறுக்கு, சோமாஸ், சீடை உள்ளிட்ட பலவகை பாரம்பரியப் பலகாரங்களையும் புதுமையான இனிப்பு வகைகளையும் தயாரிக்கின்றனர்.
இந்த எபிசோட், தீபாவளி உணவுகளின் சுவையை மட்டுமல்லாமல், அவற்றுடன் இணைந்திருக்கும் சிறுவயது நினைவுகளையும் உணர்வுகளையும் கொண்டாடும் வகையில் அமைகின்றது.
Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு Sony VIZHA-வில் காணலாம். Sony LIV-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம்.

Latest articles

தலைமுடியின் மிகப்பெரிய வணிகமும் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப் படத்தின் கதைக்களம்! -‘பிளாக் கோல்டு’ பட விழாவில் நடிகர் வெற்றி பேச்சு

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர்...

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில்,...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’...

More like this