HomeGeneralதுபாயில் நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு... 'டி. எஸ். பி இன்பராஜ்' கதாபாத்திரத்திற்கான...

துபாயில் நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு… ‘டி. எஸ். பி இன்பராஜ்’ கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வெளியீடு!

Published on

துபாயில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வில் திரைப்படத்தில் அவர் ஏற்ற ‘டி. எஸ். பி இன்பராஜ்’ கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில்,
”இங்கு வருகை தந்து எங்களுக்காக பொறுமையுடன் காத்திருந்து அன்பையும், ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றி.
நான் இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்தேன். அது உடனே நடைபெறும் என நினைக்கவில்லை.  இதற்கு பின் ஒரு நாள் அவர் என்னை சந்தித்தார். கதையை சொன்னார். பொதுவாக நான் கதை கேட்கும் போது அமைதியாகத்தான் கேட்பேன். ஆனால் ஜித்து கதையை கேட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சிரித்தேன். அவர் சொன்ன கதையை முழுவதுமாக கேட்டு ரசித்தேன். அவர் எப்போதும் போல் ‘சீன்’ திரைப்படத்திலும் புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் திறமையான நடிகை நஸ்ரியா தன் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.‌
இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நஸ்லென் இன்னும் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். நடிப்பார்.‌ இந்தப் படத்தில் நடிப்பில் அவர் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார்.
நான் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் ரசிகர். அவரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவாளர் -படத்தொகுப்பாளர் – சண்டை பயிற்சியாளர்- என அனைவரும் இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டு அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். கேரளாவில் இருந்து ஒரு குழுவினர் தமிழில் ஒரு திரைப்படத்தை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகளில், 48 திரைப்படங்களை நிறைவு செய்திருக்கிறேன். ஆனால் இந்த ‘சீன்’ திரைப்பட பயணம் மிகவும் புத்துணர்ச்சியானது. தீபாவளியன்று…. உங்களுக்கு எல்லாம் எப்படி ‘கருப்பு’ திரைப்படம் பிடித்ததோ.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் பிடித்ததோ… அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் பிடிக்கும். இந்த திரைப்படம் ஃபிரஷ்ஷான படைப்பாக இருக்கும். இதை நீங்கள் கிரைம் திரில்லர் என்றும் சொல்லலாம். மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். ஆனால் இந்த திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் இருக்கும்.
நான் இதுவரை மலையாளத்தில் நேரடியாக நடிக்கவில்லை. இருப்பினும் அங்கிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படம் கேரள மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனவே தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்க தீர்மானித்தேன். படத்தை உருவாக்கவும் முடிவு செய்தோம்.
சரவணனிடமிருந்து சூர்யாவை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் சூர்யாவாக இருக்கிறேன். சூர்யாவின் கண்டறியப்படாத பல முகங்களை திரையில் அவர்களுக்காக வெளிப்படுத்துகிறேன். அவர்களுடைய நிபந்தனையற்ற அன்பின் காரணமாக வித்தியாசமான சூர்யாவை திரையில் வெளிப்படுத்துகிறேன். ரசிகர்களுக்கும்…கதாபாத்திரத்திற்கும்… எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியுமோ..! அந்த அளவிற்கு கடுமையாக உழைக்கிறேன். இதற்காக தங்களுடைய பங்களிப்பை வழங்கிய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தான் இந்த சூர்யாவிற்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சொந்த வாழ்க்கையிலும்.. தொழில் முறையிலான வாழ்க்கையிலும் நான் ஒரு விசயத்தில் சிறிய அளவில் முயற்சி செய்தால்…. அதிலிருந்து எனக்கு பத்து மடங்கு அதிகமாக நல்லவை கிடைக்கிறது.  நடிகராக நான் ஒரு சதவீதம் முயற்சி செய்தால்… எனக்கு ரசிகர்களிடமிருந்து நூறு சதவீதம் பேரன்பு கிடைக்கிறது.
இங்கு பல மணி நேரம் பொறுமையுடன் நின்று கொண்டு பார்த்து ரசிக்கிறார்கள். இந்த ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் மரியாதையையும், என் மீது செலுத்தும் பேரன்பும் தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது.
நானும், ராஜசேகரும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து  2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை தொடங்கினோம்.  இந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனம் தான் ழகரம் ஸ்டுடியோஸ்.
அகரம் பவுண்டேஷனை இருபது ஆண்டுகளாக ஜெயஸ்ரீ தாமோதரன் தான் நிர்வகித்து வருகிறார். தற்போது ழகரம் ஸ்டுடியோவையும் அவர் நிர்வகிக்க தொடங்கி இருக்கிறார்.  ழகரத்திற்கு இது முதல் மேடை. இதற்கு உங்களின் அன்பும் ஆதரவும் தேவை.
2 டி நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படங்களை தயாரிக்கும். அந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும் .ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்றிருக்கும். இவை பெரும்பாலும் ரசிகர்களுக்கு பழக்கமான முறையில் இருக்கும். இது தொடரும்.
ஆனால் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தொடங்கி இருக்கிறோம்.‌ தொடர்ந்து இந்த நிறுவனத்தின் மூலம் புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
‘யுவர் த பெஸ்ட்..யூ கேன் யூ எனிதிங்..’ இந்த டயலாக் படம் பார்க்கும்போதும்… பார்த்த பிறகும்… ரசிகர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன்.
நீங்கள் இன்ஸ்டாகிராமில் நல்ல விசயங்களையோ அல்லது கெட்ட விசயங்களையோ பார்த்தால்.. பார்க்கத் தொடங்கினாளல்.. தொடர்ந்து அதே போன்ற வீடியோக்கள் உங்களுடைய இன்ஸ்ட்டாவில் வரும். அதனால் தான் உங்களுடைய சிந்தனையை நல்ல விசயங்களுக்கு மட்டுமே செலவிடுங்கள். நல்ல விசயத்தை மட்டுமே இன்ஸ்டாவில் பாருங்கள். இதுதான் உங்களுடைய வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். இதனால் எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க வேண்டும். அப்போதுதான் அது வாழ்க்கையிலும் எதிரொளலித்து.. மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இது மிகவும் உண்மையானது. சத்தியமானது. எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நான் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்றார்.

Latest articles

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தில் ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்!

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்' சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் 'சிட்டா.' படத்தில்...

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு...

மகன் அதீப்புடன் கியூட் போஸில் நடிகை சிம்ரன்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த சிம்ரன், தனது அழகாலும், வசீகரமான புன்னகையாலும், தனித்துவமான ஸ்டைலாலும் இன்றும்...

More like this

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தில் ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை!

விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்!

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்' சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் 'சிட்டா.' படத்தில்...

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு...