HomeGeneralசிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: 'ஜீப்ரா' பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்! 

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்! 

Published on

‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், தற்போது திரைத் துறையில் அடுத்த கட்டமாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

தனது பிறந்தநாளான இன்று, “அண்டர்டாக் ஃபிலிம்ஸ்” (Underdog Films) எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 1’ (Production No.1) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஜீப்ரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் சிபிராஜ்.
சிபிராஜ் மற்றும் ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கதை, வகை (Genre) மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் தற்போது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் படக்குழுவினரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

Latest articles

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

அமீர் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி...

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த...

தியாகராஜா டாக்கீஸ் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்....

More like this