HomeGeneralமுதல் பார்வைக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு... சுவாரஸ்ய அம்சங்களுடன் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட தயாராகும்...

முதல் பார்வைக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு… சுவாரஸ்ய அம்சங்களுடன் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட தயாராகும் அர்ஜுன் தாஸின் ‘சூப்பர் ஹீரோ’ படக்குழு!

Published on

வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.
வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.
இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘குஷி’, மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this