HomeGeneralஎதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் 'ஸ்லம் டாக்' படத்தின்...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

Published on

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.
விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ளது.
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this