HomeCinemaதமிழில் 1/2 டஜன் படங்கள்... மம்மூட்டியின் மருமகனுடன் கைகோர்ப்பு... விரைவில் பாலிவுட் பட வாய்ப்பு... உற்சாகத்தில்...

தமிழில் 1/2 டஜன் படங்கள்… மம்மூட்டியின் மருமகனுடன் கைகோர்ப்பு… விரைவில் பாலிவுட் பட வாய்ப்பு… உற்சாகத்தில் மிதக்கும் சாக்‌ஷி அகர்வால்!

Published on

பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.

தமிழில் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்த தீபாவளி அவருக்கு பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண்ணாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படமான ‘சாரா’வில் பரபரப்பாக நடித்து வருகிறார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘கெஸ்ட் 2’ உட்பட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

க்யூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் அவரை பாலிவுட் படத்திலும் காணலாம்.

Latest articles

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கரு. பழனியப்பன் இயக்கும் 'குக்கர்' திரைப்படத்தின் தலைப்பை இன்று (15-06-2026) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின்...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… -நடிகர் சௌந்தரராஜா 

நடிகர் செளந்தரராஜா, தன்னுடைய மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம்...

More like this