HomeCinemaஜியோஹாட்ஸ்டாரின் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!

ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!

Published on

ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27-ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும்.

ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ரிசார்ட்’ ஆகியவற்றை தொடர்ந்து தற்போது பார்வையாளர்களுக்கு எண்டர்டெயினிங் புரோமோவோடு ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மூலம் பொன்மலர் குடும்பத்தை அறிமுகம் செய்கிறது.

இந்தக் கதையின் மையம் ஜவுளி வியாபாரம் செய்யும் பிசினஸ்மேன், குடும்பத்தலைவர் சண்முக சுந்தரம் (நடிகர் போஸ் வெங்கட்). அவருடன் எளிமையும் அன்பும் நிறைந்த மனைவி பொன்மலர் (காயத்ரி சாஸ்திரி) மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகள் வழக்கறிஞரான நிகிலா, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் லூதுப், டிஜேவாக இருக்கும் கிஷோர், கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என கனவு காணும் ஷ்வரனிதா என குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

குடும்பத்தின் கலகலப்பும், உணர்வுப்பூர்வமான உறவுகளும், நகைச்சுவையான தருணங்களும் ஆரம்பத்தில் வெளியான புரோமோக்களில் காட்டப்பட்டது. பின்னர், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளிப்படுகிறது. இதையடுத்து, குடும்பம் பிரியாமல் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சகோதர சகோதரிகள் ஒன்றிணைகின்றனர்.

நகைச்சுவை மற்றும் எமோஷனலான இந்த புரோமோக்கள் மற்றும் அன்னையர் தினத்தில் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்ட சிறப்பு வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. ஜியோஹாட்ஸ்டாரின் நீளமான ஒரிஜினல் தொடர்களை தொடர்ந்து ரசித்து வரும் பார்வையாளர்களை மட்டுமல்லாமல், புதிய குடும்ப ரசிகர்களையும் இந்த தொடரின் புரோமோ கவர்ந்துள்ளது.

போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் தொடரை, ’உப்பு புளி காரம்’ மற்றும் ’போலீஸ் போலீஸ்’ போன்ற வெற்றிகரமான தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.

நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் மனதை தொடும் தருணங்களை கொண்டுள்ள இந்த தொடர் அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும் என நம்பலாம்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this