Monday, February 9, 2026
spot_img
HomeCinemaஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் குரல்கள் மூலம் படத்தின் மையக்கதையை விவரிக்கும் ‘சைரன்' படத்தின் டீசர்...

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் குரல்கள் மூலம் படத்தின் மையக்கதையை விவரிக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியீடு!

Published on

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘சைரன்’ படத்தின் டீசர் தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி முதல் முறையாக இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார்.

‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மிக பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் இணைந்த வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சைரன் படத்தின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளியானது. பின் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது. தற்போது வெளியாகியுள்ள டீசர் சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.

ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும், போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இந்த டீசர் இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப்படத்தின் மையக்கதையை விவரிக்கிறது. பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

படக்குழு:-
எழுத்து இயக்கம்: ஆண்டனி பாக்யராஜ்
தயாரிப்பு: Home Movie Makers சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் எம்
சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்
பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S
ஒப்பனை: மாரியப்பன்
ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
வண்ணம்: பிரசாத் சோமசேகர்
டி ஐ: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G
தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
புரமோசன் ஹெட்: ஷ்யாம்
மோஷன் போஸ்டர்: ‘வெங்கி ஸ்டுடியோஸ்’ வெங்கி
மக்கள் தொடர்பு: AIM சதீஷ், சிவா

Latest articles

எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா ஆகியோர் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு! -‘பூக்கி’ பட விழாவில் இயக்குநர் கணேஷ் சந்திரா 

அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக...

காதலர் தின கொண்டாட்டமாக, பிப்ரவரி 13-ம் தேதி கௌதம் வாசுதேவ் மேனன் – மாதவன் கூட்டணியின் மின்னலே ரீ ரிலீஸ்! 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில்...

ராஜுமுருகன் நல்ல படங்கள் தருகிற சைக்கோ! -‘மை லார்ட்’ பட விழாவில் நடிகர் சசிகுமார் கலகல 

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி...

அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ், அப்பாஸ் நடித்துள்ள ‘HALF: The Chronicles of Two Half-Blooded Vampires’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியானது!

அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ், அப்பாஸ் ஆகியோர் நடித்துள்ள ‘HALF: The Chronicles of Two...

More like this

எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா ஆகியோர் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு! -‘பூக்கி’ பட விழாவில் இயக்குநர் கணேஷ் சந்திரா 

அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக...

காதலர் தின கொண்டாட்டமாக, பிப்ரவரி 13-ம் தேதி கௌதம் வாசுதேவ் மேனன் – மாதவன் கூட்டணியின் மின்னலே ரீ ரிலீஸ்! 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில்...

ராஜுமுருகன் நல்ல படங்கள் தருகிற சைக்கோ! -‘மை லார்ட்’ பட விழாவில் நடிகர் சசிகுமார் கலகல 

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி...
error: Content is protected !!