HomeGeneralவழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி... அசத்தும் 'சத்தியவான் சாவித்திரி' ஃபர்ஸ்ட் லுக்!

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

Published on

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளியாகியுள்ளது.
வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை.
ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன்,  அனைவரும் ரசிக்கும் வண்ணம்,  ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன்,  மதுசூதனன்,  ஆர் சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this