HomeCinemaமர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையில் உருவான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5...

மர்மங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர் கதையில் உருவான ‘ஸ்டீபன்’ நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகிறது!

Published on

உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும்.

அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை ‘ஸ்டீபன்’ தர இருக்கிறது.

தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ‘ஸ்டீபன்’ இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும்.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் ‘ஸ்டீபன்’ படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் ‘ஸ்டீபன்’. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும். தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்” என்றார்.

அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் ‘ஸ்டீபன்’. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் ‘ஸ்டீபன்’ பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் ‘ஸ்டீபன்’ ப்ரீமியர் ஆகிறது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this