HomeCinemaநம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடிய நடிகை சான்யா ஐயர்: SIIMA விருது விழாவில் கெளரவம்!

நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடிய நடிகை சான்யா ஐயர்: SIIMA விருது விழாவில் கெளரவம்!

Published on

இளமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். ‘நம் அம்மா ஷாரதே’, ‘அரசி’, ‘புட்டகௌரி மதுவே’ போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘கஜா’, ‘முகபுதா’ மற்றும் ‘விமுக்தி’ போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா.

இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, “கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்” என்றார்.

இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this