HomeCinemaகாதலுக்காக செய்யும் தியாகங்களில் இது புதுசு... அசத்தலான கதையம்சத்தில் உருவான சரீரம் செப்டம்பர் 29-ம் தேதி...

காதலுக்காக செய்யும் தியாகங்களில் இது புதுசு… அசத்தலான கதையம்சத்தில் உருவான சரீரம் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகிறது!

Published on

புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘சரீரம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஜி வி பெருமாள்.

ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.

இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தில் ஜெ.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் ஜி வி பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு ஆந்திர பிரதேசம், சித்தூர், வேலூர், பெங்களூர், பாண்டிச்சேரி மகாபலிபுரம், கோவளம், சென்னை ஆகிய இடங்களில் 65 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முழுமையான காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வி டி பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி வரிகளில், ரசிகர்களை மயக்கும் 7 அருமையான பாடல்களும், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தொழில் நுட்பக் குழு:-
ஒளிப்பதிவு – டோர்னலா பாஸ்கர் கே, பரணி குமார்
எடிட்டிங் – லக்‌ஷமன்
நடன இயக்கம் – ஜெ மனோஜ்
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – பி சரத்குமார்
மக்கள் தொடர்பு – மணி மதன்

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this