HomeCinemaமெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'சம்பராலா ஏடிகட்டு' படத்தின் படப்பிடிப்பு பீட்டர்...

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடிகட்டு’ படத்தின் படப்பிடிப்பு பீட்டர் ஹெய்ன் வடிவமைப்பில் அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்குகிறது!

Published on

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பான் இந்தியா திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு” படத்தின், மிக முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தின் மத்தியில் துவங்கவுள்ளது.

பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கும் அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ்கள் படமாக்கப்படவுள்ளது. இதில் சாய் துர்கா தேஜ், ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் மோதும் காட்சிகள் படமக்காப்படவுள்ளது. படத்தின் சினிமா அனுபவத்தை உயர்த்தும் வகையில், விரிவான CGI பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய் துர்கா தேஜ், தனது முழுமையான அர்ப்பணிப்புடன், சம்பராலா ஏடிகட்டு படத்திற்காக உழைத்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு புதிய திருப்புமுனையாகவும், உணர்ச்சிகரமான சவாலான கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.

முதலில் தசரா வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தாலும், தொழில்துறை வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவிக்க உள்ளனர்.

ஹனுமேன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக SYG உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சம்பராலா ஏடிகட்டு, ஒரு முக்கியமான பான்-இந்தியா ஆக்சன் -டிராமாவாக ரசிகர்களை கவரத் தயாராகி வருகிறது.

இயக்குநர் ரோஹித் KP இயக்கத்தில், கே நிரஞ்சன் ரெட்டி – சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிப்பில், பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் ₹125 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது சாய் துர்கா தேஜ் அவர்களின் இதுவரையிலான திரைப்படப் பயணத்தில், மிகப்பெரிய திரைப்படமாகும்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this