HomeCinemaசிவண்ணா – வெங்கட் கோனங்கி – பவன் வடேயார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர்...

சிவண்ணா – வெங்கட் கோனங்கி – பவன் வடேயார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது!

Published on

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3 அன்று பெங்களூருவில் துவங்குகிறது. அதன் பின் மண்டியாஇமாச்சலப் பிரதேசம் , மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இதில் ஜெயராம், சாய் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, பிரகாஷ் பெலவாடி போன்ற மூத்த நடிகர்களும், சஞ்சனா ஆனந்த் மற்றும் தீக்ஷித் ஷெட்டி போன்ற இளம் திறமையாளர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படம் முழுக்க வணிக அம்சங்களுடன் கூடிய கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகிறது. இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஷஷாங்க் நாராயண் எடிட்டிங்கை கவனிக்கிறார். சிவராஜ்குமார் – பவன் வடேயார் (Pavan Wadeyar) – KVN Productions ஆகியோரின் முதல் கூட்டணி என்பதால், இயல்பாகவே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this