HomeCinemaசிறந்த ஸ்டண்ட் இயக்குநருக்கான கேரள அரசின் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா!

சிறந்த ஸ்டண்ட் இயக்குநருக்கான கேரள அரசின் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா!

Published on

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கை தேர்ந்தவர்.

ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.

இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது மனோரமா கேரளா மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்றுள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this