HomeCinemaஜெய் நடிப்பில் ரொமான்டிக் திரில்லராக உருவான சட்டென்று மாறுது வானிலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

ஜெய் நடிப்பில் ரொமான்டிக் திரில்லராக உருவான சட்டென்று மாறுது வானிலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

Published on

பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன், கலை இயக்கம் எஸ் கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை வி. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி எஸ் மற்றும் பி. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

 

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...