HomeCinemaஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு 'கருப்பு.' விரைவில் ஆச்சரிய அறிவிப்புகள்...

ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு ‘கருப்பு.’ விரைவில் ஆச்சரிய அறிவிப்புகள்…

Published on

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு.’

அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.

சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப்பு’. அவர்களின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இத்திரைப்படத்தில் இருவருமே முற்றிலும் புதிய, வித்தியாசமான கதாபாத்திரங்களி தோன்றவுள்ளார்கள். முதல் பார்வை, டீசர், மற்றும் ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்த இடைவெளியில் வெளியாகவுள்ளன. அவை ரசிகர்களும், திரைப்பட விரும்பிகளுக்கும் தெளிவானப் புரிதலைக் கொடுக்கும். இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாஸிகா, அனகா மாயா ரவி, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் பட்டாளம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைக்க, பல மகத்தான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கையாள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். விக்ரம் மோர் மற்றும் அன்பறிவு இரட்டையர்கள் என மூன்று சண்டைப் பயிற்சிக் கலைஞர்களும் தங்கள் அற்புதமான சண்டைக் காட்சிகளுக்காக நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றவர்கள். இவர்கள் மூவரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் உயர்தர சண்டைக் காட்சிகளை அதிரடியாக வடிவமைத்துள்ளனர். விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சரமூடு இந்தப் பிரமாண்டப் படத்திற்காக மிகப்பெரிய அரங்குகளை வடிவமைத்துள்ளார்.

‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை ஒரு சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. ஒரே நேரத்தில் இறுதி கட்ட வேலைகளையும் படக்குழு கவனித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவெ தெரிவித்தபடி, ‘கருப்பு’ ஒரு பண்டிகை நாள் கொண்டாட்டத்துக்கான திரைப்படமாக கச்சிதமாக இருக்கும். எனவே, வெளியீட்டு தேதி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மற்ற ஆச்சரிய அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டிருங்கள். உங்களுக்காக ஒரு உயர்தர பொழுதுபோக்கு விருந்து தயாராகி வருகிறது.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this