HomeCinema50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை 48 மணிநேரத்தில் கடந்து சாதனை படைத்த 'கிங்ஸ்டன்' திரைப்படம்!

50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை 48 மணிநேரத்தில் கடந்து சாதனை படைத்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம்!

Published on

ZEE5-ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.

கிங்ஸ்டன் திரைப்படம் மாறுபட்ட கதைக்களம், அற்புதமான விஷுவல்கள், கடல் பின்னணி, நடிகர்களின் திறமையான நடிப்பு என, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

இயக்குநர் கமல் பிரகாஷ், இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. எதிர்பாராத ஒரு களத்தின் பின்னணியில் மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தர வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கிய படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ​​ZEE5 ப்ரீமியர் மூலம் இப்படத்தை அனைத்து மக்களும் கொண்டாடுவதைக் காணப் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் மீது அன்பைக் கொட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் “கிங்ஸ்டன் திரைப்படம் மீது மக்கள் காட்டி வரும் அபரிமிதமான அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இப்பாத்திரத்தை ஏற்று நடித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த விசித்திரமான உலகில் மூழ்கி அதை இவ்வளவு பெரிய டிஜிட்டல் வெற்றியாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி” என்றார்.

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this