HomeCinemaகாமெடி கலக்கலாக உருவான 'சொட்ட சொட்ட நனையுது' படத்தின் டைட்டில் ப்ரொமோவை இயக்குநர் வெங்கட் பிரபு,...

காமெடி கலக்கலாக உருவான ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தின் டைட்டில் ப்ரொமோவை இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்து!

Published on

இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை மையப்படுத்தி கலக்கலான கமர்ஷியல் படைப்பாக, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ள படம் ‘சொட்ட சொட்ட நனையுது,’

நிஷாந்த் ரூஷோ கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில் தேர்ந்த நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும்தான் படத்தின் கதைக்களம்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் ப்ரொமோவை இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்‌ஷன், நிதின் சத்யா, மா க ப ஆனந்த், கே பி ஒய் புகழ், கே பி ஒய் தீனா, கே பி ஒய் பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே வெளியிட்டுள்ளனர்.

மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் எஸ் ஃபரீத் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கலக்கப்போவது யாரு’ ராஜா கதை வசனம் எழுதியுள்ளார்.

முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டு, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகவிருக்கிறது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this