HomeCinemaகருணாஸ், கருணாகரன் கூட்டணியின் கலகலப்பான நடிப்பில் சுந்தரா டிராவல்ஸ் 2-ம் பாகம் 'சுந்தரா டிராவல்ஸ் சூப்பர்...

கருணாஸ், கருணாகரன் கூட்டணியின் கலகலப்பான நடிப்பில் சுந்தரா டிராவல்ஸ் 2-ம் பாகம் ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

முரளி, வடிவேலு நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.

தற்போது தயாராகும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

கருணாஸ், கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இளம் ஜோடிகளாக விக்னேஷ் – அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.

படத்தை இயக்குகிறார் கறுப்பு தங்கம். அவரிடம் பேசியபோது, ”இந்த கதையில் பஸ்தான் ஹீரோ. அதை மையப்படுத்தித்தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம்.

முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி, படத்திற்கு ஏற்றார்போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.

கொடைக்கானல், பன்றிமலை உள்ளிட்ட இடங்களிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு… சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்டில் விரைவில் பயணிக்கலாம்” என்றார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – செல்வா.ஆர்
இசை – ஹரிஹரன்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டிங் – பி சி மோகன்
கலை இயக்கம் – மோகன மகேந்திரன்.
ஸ்டில்ஸ் – குமார்
தயாரிப்பு நிர்வாகம் – கணேசன். எம்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணை தயாரிப்பு – எஸ். சிவமுருகன்
இயக்கம் – கருப்பு தங்கம்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this