HomeCinemaவிஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் பாரதிராஜாவின் அறிமுக நாயகன்...

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் பாரதிராஜாவின் அறிமுக நாயகன் கண்ணன்!

Published on

காதல் ஓவியம் படத்தின் மூலம் மறக்க முடியாத நடிகராக அறியப்பட்டவர் மூத்த நடிகர் கண்ணன். இவர் ‘சக்தி திருமகன்’ படத்திற்காக அழுத்தமான கதாப்பாத்திரத்தின் மூலம் பெரிய திரைக்கு மறுபிரவேசம் செய்கிறார்.

பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன், சக்தி திருமகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது நடிப்பு மற்றும் அவரது கதாபாத்திரத்தின் படைப்பு குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அவரது comeback, இந்த உணர்ச்சிகரமான படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

மிகவும் புகழப்பட்ட படைப்புகளான அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குனரான அருண் பிரபு இயக்கும் ‘சக்தி திருமகன்’ படம், குடும்ப உறவுகள், அதிரடி சண்டைகாட்சிகள் மற்றும் எமோஷனல் நிறைந்த ஒரு ஜன ரஞ்சக படமாக உருவாகிறது. இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும். மேலும் இது அவரது 25 வது படம்.

மீரா விஜய் ஆண்டனி என்ற பெயரில் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படம், அதன் அழுத்தமான கதைசொல்லல் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

இந்த உணர்ச்சிப் பூர்வமான படத்தில் கண்ணனுடன் இணைந்து நடித்துள்ள வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் ஆகியோர் ஒவ்வொருவரும் அவர்களது சிறப்பான நடிப்பின் மூலம் கதைக்கு ஆழத்தையும், உயிர்ப்பு தன்மையையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அழுத்தமான கதை, அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் ஆழமான எமோஷனஸ் என ‘சக்தி திருமகன்’ படம் அனைவரும் பார்க்க கூடிய ஒன்றாக உருவாகி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் இந்த படத்தின் படக்குழுவினர், பார்வையாளர்களுக்கு பிரமாண்டமான சினிமா அனுபவத்தை வழங்குவதில் மும்முரமாக உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிராஸ்தா மற்றும் நடன இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட நட்சத்திர தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்தில் உள்ளனர்.

Latest articles

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது!

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம்...

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை...

டாக்டர் ஐசரி கே கணேஷ் முன்னிலையில் தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் !

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி....

அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த...

More like this