HomeCinemaரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கும் சுப்ரமணி படத்தில் முதன்மை கதாபாத்திரமேற்ற ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’...

ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கும் சுப்ரமணி படத்தில் முதன்மை கதாபாத்திரமேற்ற ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ நாய்!

Published on

வின்சென்ட் செல்வா தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர். அவர் தற்போது ‘சுப்ரமணி’ என்ற புதிய ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார்.

‘திரௌபதி’ உள்ளிட்ட பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரியவகை நாய் இனமான ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ முதன்முறையாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

இந்த நாயைப் படத்தில் நடிக்க வைப்பதற்கு ஏற்ப பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயுடன் ஒரு மாதத்திற்கு மேலாக நேரம் செலவிட்டு பழகி வருகிறார். இப்படம் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லராக இருக்கும். முன்னதாக ‘ஜித்தன் 2’ படத்தைத் தயாரித்த வின்சென்ட் செல்வாவின் உதவியாளரான ராகுல் பரமஹம்சா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள அடர் வனப்பகுதியில் நிறைவடைந்துள்ளது மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

படத்தின் எழுத்தாளரான இயக்குநர் வின்சென்ட் செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “மனிதனின் சிறந்த நண்பன் நாய்கள் மட்டும்தான். புனித நூல்கள், புராணங்கள், வரலாற்றுப் படைப்புகள் இவற்றில் எல்லாம் நாய்கள்தான் மனிதர்களுக்கு சிறந்த துணையாக இருந்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான ஆரம்பகால உறவு 15,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை என்னை ஈர்த்தது. தவிர அகிரா குரோசாவா, ஸ்டீபன் கிங், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உட்பட உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் படைப்புகளில் எப்போதும் ‘நாய்களை’ முக்கியப் கதாபாத்திரங்களாகக் கொண்டு வந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். பல வருடங்களாக, நாயை மையக்கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது ‘சுப்ரமணி’ படம் மூலம் நடந்திருக்கிறது.

இதில் ‘பெல்ஜியன் மாலினோயிஸ்’ என்ற அரிய இனத்தைச் சேர்ந்த நாய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களை மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இப்படத்தை எஸ் புரொடக்ஷன்ஸின் எஸ். சௌந்தர்யா தயாரிக்கிறார். இவருடன் பிரனவ் & பாலாஜி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this