HomeCinemaதனுஷ் வெளியிட்ட, அதர்வா முரளியின் 'டி என் ஏ' பட டீசர்!

தனுஷ் வெளியிட்ட, அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்!

Published on

அதர்வா முரளி நடித்திருக்கும் ‘டி என் ஏ’ எனும் திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர், ” திவ்யா – ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.‌ காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன். அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும்” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் – சத்ய பிரகாஷ் – அனல் ஆகாஷ் – பிரவீண் சைவி – சஹி சிவா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this