HomeCinemaபடப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் செல்வராகவன், யுவன் கூட்டணியின் 7ஜி ரெயின்போ காலனி 2!

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் செல்வராகவன், யுவன் கூட்டணியின் 7ஜி ரெயின்போ காலனி 2!

Published on

தமிழ் சினிமாவில் நெஞ்சைத் தொட்ட காதல் காவியமாக 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி.’

செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது.

இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் நடிக்கிறார். ஜெயராம், சுமன் செட்டி மற்றும் சுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணிபுரிகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறியதாவது: “7ஜி ரெயின்போ காலனி ‘ முதல் பாகம் தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. இரண்டாம் பாகத்திலும் அதே எதிர்பார்ப்பையும் மேஜிக்கையும் பூர்த்தி செய்ய நாங்கள் எங்களது சிறப்பை கொடுத்து உழைத்து வருகிறோம்” என்றார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this