HomeCinemaசக்திவாய்ந்த பாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்க்கும் சிம்ரனின் அடுத்த பாய்ச்சல் 'தி லாஸ்ட் ஒன்.'

சக்திவாய்ந்த பாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்க்கும் சிம்ரனின் அடுத்த பாய்ச்சல் ‘தி லாஸ்ட் ஒன்.’

Published on

மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக‌ புகழ் பெற்ற‌ லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது. இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக்கொண்டிருப்ப‌தால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த அசாத்தியமான‌ பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹ‌ர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.

தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.

தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.

நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this