HomeGeneralஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நித்யா, வித்யா இரட்டையர்களை அழைத்துப் பாராட்டி, உதவி வழங்கி...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நித்யா, வித்யா இரட்டையர்களை அழைத்துப் பாராட்டி, உதவி வழங்கி ஊக்குவித்த ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ செண்பகமூர்த்தி!

Published on

கோவையைச் சார்ந்த ஏழ்மைக் குடும்பத்து வாரிசுகளான வித்யா, நித்யா இரட்டையர்கள் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறார்கள்.

அவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் எம்.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்குத் தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கியுள்ளார்.

சீனாவில் நடந்த ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை செய்துள்ளார்.

ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தேசிய அளவிலான போட்டிகளிலும் தமிழகம் சார்பில் இந்த இரட்டையர்கள் கலந்துகொண்டு, பல சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட நித்யா 56.01 நொடிகளில் ஓட்ட தூரத்தை கடந்து, சாதனை செய்துள்ளார். மேலும் ஓட்டப்பந்தய உலக சாதனை வீராங்கனை பி டி உஷா செய்த சாதனையை வித்யா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

இந்த நிலையில் சாதனைகள் படைத்த வீராங்கனைகளை அழைத்துப் பாராட்டியதுடன் நிதியுதவி வழங்கி, விளையாட்டுப் போட்டிகளுக்குக்குத் தேவையான உபகரணங்களையும் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார் செண்பகமூர்த்தி.

‘தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தாங்கள் உதவுவோம்’ என்றும் தெரிவித்தார்.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this