HomeCinemaசோனியா அகர்வால் நடிப்பில், சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் 'சீரன்' ரிலீஸுக்கு தயார்!

சோனியா அகர்வால் நடிப்பில், சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் ‘சீரன்’ ரிலீஸுக்கு தயார்!

Published on

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளையும் உரக்கப்பேசும் அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சீரன்.’ அறிமுக இயக்குநர் துரை கே முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.

படத்தில் இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், சூப்பர் சிங்கர் ஆஜித், க்ரிஷா குரூப், சென்ட்ராயன், ஆர்யன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு கிராமப்புற பகுதிகளில் நடந்து நிறைவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் தெரியவரும்.

”இந்த படம் நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவதுதான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது” என்கிறார் படத்தின் இயக்குநர்.

படக்குழு:-

தயாரிப்பு: ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ், இயக்குநர் துரை கே முருகன்

ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம்

இசை: அரவிந்த் ஜெரால்ட் & ஏ கே சசிதரன்

பின்னணி இசை: ஜூபின்

எடிட்டர்: ஏ.ரஞ்சித் குமார்

கலை இயக்குனர்: எஸ்.அய்யப்பன்

பாடலாசிரியர்: சினேகன், கு.கார்த்திக்

நடன இயக்குநர்: பாபா பாஸ்கர்

சண்டைக்காட்சி: டி.ரமேஷ்

மக்கள் தொடர்பு: வேலு

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this