HomeCinemaசன்னி தியோல், பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இணையும் புதிய படம் ஹைதராபாத்தில் துவங்கியது!

சன்னி தியோல், பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இணையும் புதிய படம் ஹைதராபாத்தில் துவங்கியது!

Published on

தனது கதர் 2  படம் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். SDGM என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இவரது அடுத்த படம், மாஸ் ஆக்சன் எண்டர்டெயினராக, மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது.

கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இயக்கவுள்ளார். இதுவரை கண்டிராத ஆக்‌ஷன் அவதாரத்தில் ஹீரோ சன்னி தியோலை இப்படத்தில் காட்சிப்படுத்தவுள்ளார். இது அவரது முதல் இந்தி திரைப்படம். படத்தில் சயாமி கெர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் திரைப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாகத் துவக்கப்பட்டது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஆகிய இரண்டு நிறுவனங்கள் பெரிய  நட்சத்திரங்களை வைத்து அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களைத் தயாரிப்பதில்  பெயர் பெற்றவை. இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் மிகச் சரியான இயக்குநர் இணையும் இந்த பாலிவுட் #SDGM படம் சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் அட்டகாசமான படைப்பாக உருவாகவுள்ளது. படப்பிடிப்பு வரும் ஜூன் 22-ல் துவங்குகிறது.

தென்னிந்திய இயக்குநருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் மீது, வடநாட்டுப் பார்வையாளர்கள் சிறப்பு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்பொழுதே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this