HomeCinemaகவின், இளன், யுவன் கூட்டணியின் ஸ்டார் படத்தின் டிரெய்லரில் ததும்பும் இளமை!

கவின், இளன், யுவன் கூட்டணியின் ஸ்டார் படத்தின் டிரெய்லரில் ததும்பும் இளமை!

Published on

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்க, ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி.. ரசிகர்களிடத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்திலும் ரசிகர்களை கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மூன்றெழுத்து படைப்பாளிகள் மூவரும் ஒன்றிணைந்து, ‘ஸ்டார்’ எனும் மூன்றெழுத்தில் இளமை ததும்பும் படைப்பை வழங்கி இருப்பதால்.. இளைய தலைமுறையினர் மற்றும் இணைய தலைமுறையினரிடத்தில் இந்த முன்னோட்டத்திற்கு ஆதரவு அபிரிமிதமாக பெருகி வருகிறது.‌ இதனால் எதிர்வரும் மே மாதம் பத்தாம் தேதியன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு .. அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்மன்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. வி. எஸ். என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பி. ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this