HomeMovie Reviewரஜினி கேங் சினிமா விமர்சனம்

ரஜினி கேங் சினிமா விமர்சனம்

Published on

ரசிக்கத்தக்க காமெடி கலாட்டாக்களோடு ‘ரஜினி கேங்.’

ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ள புறப்பட்ட அந்த காதலர்கள் லிஃப்ட் கேட்டு ஏறிய காரில் திருடன் ஒருவனும் லிஃப்ட் கேட்டு ஏறுகிறான். காரை ஓட்டும் டிரைவர் தன்னை யாரென்றே தெரியாத ஒருவித பாதிப்புக்கு ஆளானவர். காரில் பயணிக்கும் காதலர்கள் போக நினைத்த ஊர் வேறு. போய்ச் சேர்ந்த இடம் வேறு. இன்னொரு பக்கம் அவர்கள் பயணித்த கார் ஒரு அமைச்சரிடமிருந்து திருடப்பட்டிருக்க அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் காதலர்களைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். காதலன் சற்றுமுன் நடந்ததைக்கூட மறந்துவிடக் கூடியவர்.

இப்படி பல சிக்கல்கள். அதையெல்லாம் காதலர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது கதையோட்டம்… இயக்கம் எம் எஸ் ரமேஷ்பாரதி

ரஜினி கிஷன் புதுமுகம் என்றாலும் காமெடி கதைக்கேற்றபடி நடிப்பதில் குறைவைக்கவில்லை; காமெடியோடு நடனமும் நன்றாக வருகிறது.

அவருக்கு ஜோடியாக வருகிற திவிகாவின் இளமையும் அழகும் பாடல் காட்சிகளுக்கு உதவுகிறது. காதலனின் ஞாபக மறதியால் அவதிப்படுவது, அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கி பேயாட்டம் போடுவது என கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பையும் நல்லவிதமாக தந்திருக்கிறார்.

முனீஷ்காந்த் தான் யாரென்றெ தெரியாதவராக, என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என தெரியாமல் எதைஎதையோ செய்து ரசிக்க வைக்கிறார். மொட்டை ராஜேந்திரன் ஆவிகள் நடமாடும் மையத்தில் செய்யும் அதிரிபுதிரி அட்டகாசங்களால், கெட்டப்பால் கலகலப்பூட்டுகிறார். திருடனாக வருகிற கல்கி ராஜாவுக்கும் காமெடி களேபரத்தில் முக்கியப் பங்கிருக்கிறது. கூல் சுரேஷும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோரும் கதையில் கலந்து உறவாடுகிறார்கள்.

இயற்கை பசுமை பரப்பியிருக்கும் ஏற்காட்டின் செழுமையை ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமாரின் கேமரா வழி பார்ப்பது கண்களுக்கு ஜில்லென்றிருக்கிறது.

பாடல்களின் இசையில் எனர்ஜியேற்றியிருக்கும் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் பின்னணி இசை தலைவலியை உருவாக்கலாம். அந்தளவுக்கு அதிரடித்திருக்கிறார்.

காதல் காமெடி, ஹாரர் காமெடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் ரஜினி கேங்கில் நுழைந்தால் ரசித்து சிரிப்பது உறுதி!

Rating 3 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this