Monday, December 8, 2025
spot_img
HomeCinemaபெண்களிடம் தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இருந்தால் ஜெயித்து விடலாம்!.-ராபர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...

பெண்களிடம் தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இருந்தால் ஜெயித்து விடலாம்!.-ராபர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கவிதா

Published on

பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில், பெண்களின் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ராபர்.’ இந்த படம் வரும் மார்ச் 14 அன்று வெளியாகவுள்ளது. முன்னதாக இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த மார்ச் 7-ம் தேதி சென்னையில் நடந்தது.

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், நடிகைகள் அம்பிகா, ரம்பா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கவிதா, ”எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது.

தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

தியாகராஜன் சார் வீட்டில் தான் நான் வளர்ந்தேன். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அவர் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. கனடாவில் இருந்தாலும் ரம்பாவும் நானும் நெருக்கமாக தான் உள்ளோம். ரம்பாவின் அம்மா ஒரு இனிப்பு பண்டம் இருந்தாலும் வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். என்னை பத்திரிகையாளராக பார்க்காமல் அவர்கள் வீட்டில் இடம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.

ஒரு ஊழியர் என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என் பாஸிடம் கூறினேன். உடனே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும்.

குழந்தைகளுக்கான பாலியல் விஷயத்தை மையமாக வைத்து சாக்லேட் என்ற குறும்படம் தயாரித்தேன்.இரண்டாவதாக தென் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து கொலை விளையும் நிலம் என்ற டாக்குமென்டரி படத்தை தயாரித்தேன். அப்படத்தை விகடன் செய்தியாளராக இருந்த ராஜீவ் காந்தி இயக்கினார். அடுத்து ‘எண்ணம் போல் வாழ்க்கை’ இது கொரணா காலத்தில் ஆல்பம் பாடலாக தயாரித்தேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா U1 ரெகார்ட்ஸ் மூலம் வெளியிட்டார். சுமார் 20 கலைஞர்கள் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் உதவி புரிந்தார்கள். தொடர்ந்துநடிகர் ஜனகராஜ் அவர்கள், 700 படங்கள் நடித்திருக்கிறார். அவரிடம் தாத்தா என்ற குறும்படத்தின் கதையை நரேஷ் இயக்குனர் கூறினார்.. ஜனகராஜ் சாரிடம் இந்த கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், நான் அப்படியே எடுத்து வைத்து விடுவேன் என்று நான் கூறிய பிறகு ,அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்றது.

இந்த சமயத்தில், சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன்.

அதன் பிறகு, எல்லா ஊர்களுக்கும் ராஜா சார் வந்து விட்டார். ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் வரவில்லை. ராஜா சாரை எங்கள் ஊர் மக்களுக்காக அழைத்து வர வேண்டும். அவரை வைத்து எங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் தினமலர் மீடியா பார்ட்னராக இருந்து பெரும் உதவி புரிந்தது.

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.

ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில், ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

ராபர் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதி யாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்திருக்கிறது.
பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்த பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போக போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நிறைய சிறிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும், புதிய நபர்களுக்கும் பாக்யராஜ் சார் ஆதரவாக இருக்கிறார்

பாக்யராஜ் சாரை பார்த்து சினிமாவிற்கு வந்தவர்கள் நிறைய பேர். சாருடைய படத்திற்கு போக வேண்டும் என்றால் அவர் நன்றாக நடிப்பாரா?! டான்ஸ் ஆடுவாரா?! என்று எதையும் பார்க்க வேண்டாம். கதை நன்றாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தினால் படம் பார்க்க அத்தனை பேர் வந்தார்கள்.

தியாகராஜன் சார் சினிமாவிற்கு வந்த போது எத்தனை பேர் மிரண்டு போனார்கள்?! அதிக படங்களில் வில்லனாக நடித்து பேர் வாங்கிய ஒரே கதாநாயகன் தியாகராஜன் சார் தான். அம்பிகா மேடம், ராதா மேடம் கொடுக்காத வெற்றிகள் இங்கு கிடையாது. அழகிய லைலாவாக ரம்பாவை போல் யாரால் சிறப்பாக நடித்திருக்க முடியும்?! இவர்கள் அனைவரும் இந்த மேடைக்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.

இந்த படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்த பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் என்னுடைய ஊர் காரர். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு போன் செய்து பேசுவேன். எல்லா படமும் நல்ல படம் என்று சொல்கிறீர்களே?! அப்போது நல்ல படம் என்றால் என்ன என்று சில சமயம் மிரட்டி கூட இருக்கிறேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் அபிப்ராயம் கேட்பார். சில படங்கள் சென்சார் போர்டு முன் கூட்டியே பார்த்துவிட்டால் நானே அழைத்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறுவேன்.

இங்கிருப்பவர்கள் அனைவரும் சிறிய படத்திற்கு உதவி செய்பவர்கள் தான். என்னோடு பயணித்து எனக்கு பாதை போட்டு கொடுத்தவர்கள். என்னுடைய இந்த அழகான பயணத்தில் இன்னும் பலரை அழைத்து செல்ல ஆசைப்படுகிறேன். நான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தாலும், புது முயற்சிகள் எடுத்தாலும் இங்குள்ள பத்திரிகையாளர்களிடம் புகைப்படம், காணொளி மற்றும் செய்திகளை வெளியிட்டு அனுப்புங்கள் என்று உரிமையோடு கூறுவேன். அவர்களும் மறுநாளே எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்த பாசத்திற்கு ஈடு இணை கிடையாது. அக்காவாக தங்கையாக தோழியாக எனக்கு ஆதரவைத் தரும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா நல்லது கெட்டதிலும் என் அம்மா என்னுடனே இருந்திருக்கிறார்கள். எனது கணவர் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆதரவு இல்லை என்றால், பிரச்சினைகள் போராட்டங்களை தாண்டி ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியாது. அதேபோல், தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இந்த சக்தி பெண்களிடம் இருந்தாலே ஜெயித்து விடலாம். வந்திருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் பாண்டி, தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஆனந்த கிருஷ்ணன், நடிகர் ஸ்டில் பாண்டி, நடிகை தீபா, இசையமைப்பாளர் ஜோகன், நடிகர் சத்யா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், தினமலரின் முதன்மை மக்கள் தொடர்பாளர் கல்பலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

விழாவில், பெண் பத்திரிகையாளர்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்த நினைவு பரிசை அம்பிகா ராதா இருவரும் சேர்ந்து வழங்கினர்.

 

 

Latest articles

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...

 ‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்! 

இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம்...

More like this

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...
error: Content is protected !!