HomeCinemaஜனவரி 6லிருந்து, திரை நட்சத்திரங்கள் குவியும் ரோஜா தொடரின் 2-ம் பாகம் சரி க மா...

ஜனவரி 6லிருந்து, திரை நட்சத்திரங்கள் குவியும் ரோஜா தொடரின் 2-ம் பாகம் சரி க மா சேனலில் ஒளிபரபரப்பு!

Published on

சன் டிவியில், சரி க மா நிறுவனத்தின் தயாரிப்பில் 1300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அனைவரின் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்ற ‘ரோஜா’ தொடரின் 2ம் பாகத்தை இப்போது தயாரித்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸ் ஜனவரி 6-ம் தேதி முதல் Saregama TVShows Tamil youtube சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்த வெப் சீரிஸில் ரோஜா முதல் பாகத்தில் நாயகியாக நடித்த பிரியங்காவே இதிலும் நாயகியாக நடிக்கிறார். பிரபல தொடர்களில் நடித்து வரும் நியாஸ் நாயகனாக நடிக்கிறார். பெரிய திரைகளில் நடித்த கலைஞர்கள் ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத்பானு, கம்பம் மீனா, கலக்கப்போவது யாரு சில்மிஷம் சிவா, ஸ்வேதா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலியா, தீபா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

யூடியூப் சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் நாயகன் மதி காதல் முயற்சியில் ஈடுபட்டு 17 பெண்களை காதலித்து பின்பு காதல் தோல்வி அடைந்த விரக்தியின் விளிம்பில் இருக்கிறான். அப்போது ரோஜா மகள் மலர் மதி வேலை செய்யும் சேனலில் எம்.டி.யாக பதவியேற்கிறாள். எதிர்பாராதவிதமாக மலர் மதிக்கு காதல் அக்ரிமெண்ட் போட்டு தன்னை இம்ப்ரஸ் செய்தால் கல்யாணம் செய்கிறேன் என்று சவால்விடுகிறாள். இதை மதி ஏற்று மலர் மீது காதல் முயற்சியில் இறங்குகிறான். மதியின் முயற்சி வெற்றிபெற்றதா? இல்லையா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ரோஜா – 2 உருவாகியிருக்கிறது.

இயக்குநர் மிஸ்கினின் உதவியாளரும், கள்ளப்படம் படத்தின் இயக்குநருமான வடிவேல் இயக்குகிறார். ஒளிப்பதிவை பி சி ஸ்ரீராமின் உதவியாளரும் , கள்ளப்படம் படத்தின் ஒளிப்பதிவாளருமான ஸ்ரீராம் சந்தோஷ் கவனிக்கிறார். திரைக்கதை, வசனத்தை பாணாகாற்றாடி, ஆம்பள’ உள்ளிட்ட படங்களுக்கு. வசனம் எழுதிய ஜி.ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். சீரிஸை கிரியேட்டிவ் ஹெட் பிரின்ஸ் இமானுவேல் பொறுப்பில் உருவாக்குகிறார்கள்.

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this